சுடச்சுட

  
  udhakumar

  அணுஉலைக்கு எதிரான போராட்டத்திலிருந்து வெளியேறவே நீங்கள் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தீர்களா?

  இடிந்தகரையில் நடைபெற்று வரும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் செல்ல வேண்டுமானால் அரசியல் களத்துக்கு மாற நினைத்தோம்.

  அதற்காக மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என எங்களை ஆதரித்த அனைத்துக் கட்சிகளிடமும் நீங்கள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் ஆதரவளிப்பதாகக் கூறினோம்.

  பல்வேறு காரணங்களால் அது சாத்தியமில்லை எனத் தெரிந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் இடிந்தகரைக்கே வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

  எங்களது வழக்குகளை நடத்தி வரும் பிரசாந்த் பூஷண் இடிந்தகரைக்கு வந்து அழைப்பு விடுத்தார்.

  எனவே ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தோம்.

  ஆம்ஆத்மி கட்சியால் தேர்தலில் யாருக்கு பாதிப்பு?

  அதனை இப்போது கணிக்க முடியாது.

  ஆனால், நாங்கள் ஏற்கெனவே ஆபத்தான ஆறு என பட்டியலிட்ட காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

  ஆம்ஆத்மி எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது?

  அதனை கட்சியின் தமிழகக் குழு முடிவு செய்யும். நாங்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவோம். நான் கன்னியாகுமரியில் போட்டியிட இருக்கிறேன்.

  நீங்கள் கன்னியாகுமரியில் போட்டியிடுவது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறதே?

  கன்னியாகுமரியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக, பாஜக ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

  ஆனாலும் வெற்றிக்காக நாங்கள் கடினமாக உழைப்போம். அணுஉலைக்கு எதிரான பிரசாரத்தை இந்தத் தேர்தலில் உறுதியுடன் எடுத்துச் செல்வோம்.

  ஆம்ஆத்மி விளம்பரத்துக்காக செயல்படும் கட்சி என்ற குற்றச்சாட்டு குறித்து?

  ஆம்ஆத்மி கட்சி இப்போதுதான் பிறந்து தவழ்ந்து வருகிறது.

  நாங்கள் எங்கள் கொள்கைகளை மக்கள் முன் வைத்துள்ளோம்.

  கொள்கைகளை வென்றெடுக்க சளைக்காமல் போராடுவோம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai