சுடச்சுட

  
  praveenkumar

  மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்டு வரும் வாகனச் சோதனைகள் மூலம் இதுவரை ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

  இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட தகவல்: வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அனைத்துத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள், கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

  வாகனச் சோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இதுவரை 2 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலைகள், தங்க நகைகள் உள்பட ரூ.47 லட்சத்து 18 ஆயிரத்து 660 மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் விடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் அனைத்தும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai