சுடச்சுட

    

    சில்லறை வணிகத்தை காக்கும் கட்சிக்கு ஆதரவு: த. வெள்ளையன்

    By dn  |   Published on : 12th March 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vellaian

    சில்லறை வணிகத்தை காக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

    தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி:

    அன்னிய முதலீட்டை விரட்டினால்தான் நம் நாட்டுப் பொருளாதாரம் முன்னேறும். ஆனால், அன்னிய முதலீட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், அன்னியர்கள் ஆணையிடும் வரியை இங்கு ஆட்சியாளர்கள் விதிக்கின்றனர்.

    தேர்தல் வருவதால் அனைத்து கட்சிகளுக்கும் மிக முக்கியமான கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. உலக வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய உறுதியளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஒழிக்க மக்களைத் திரட்டுவோம் என உறுதியளிக்கும் கட்சியையும் ஆதரிப்போம் என்றார் வெள்ளையன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai