சுடச்சுட

  

  செயற்கை முறையில் பொறிக்கப்பட்டு கோடியக்கரை கடலில் விடப்பட்ட 190 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள்

  By dn  |   Published on : 12th March 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் செயற்கை முறை பொறிப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி என்ற அரியவகை கடல் ஆமை இனத்தின் 190 குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை கடலில் விடப்பட்டன.

  இந்த ஆமை இனம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் இனப் பெருக்கத்துக்காக கோடியக்கரை உள்ளிட்ட தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகிறது.

  கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள், சுமார் 41 நாள்களுக்குப் பிறகு இயற்கையாக பொறிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும்.

  ஓநாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூகவிரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு, செயற்கை முறையில் குஞ்சுகளை பொறிக்கச் செய்து கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  கோடியக்கரை வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை முறை பொறிப்பகத்தில் நிகழாண்டில், சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து முதல் கட்டமாக 190 ஆமை குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை வெளிவந்தன.

  இந்தக் குஞ்சுகள் அனைத்தும் கோடியக்கரை வனச்சரக அலுவலர் கோபிநாத் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடலில் விடப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai