சுடச்சுட

  
  gr

  வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

  இதற்கான காரணங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வெளியிட்ட அறிக்கை:

  தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்

  டியிட முடிவு செய்துள்ளன.

  மார்ச் 10-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூடி இந்தத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிடும் என அறிவித்தது. இது இடதுசாரி இயக்கத்துக்கு அப்பாற்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  காங்கிரஸ், பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட மாற்று அணியை உருவாக்க மார்க்சிஸ்ட் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் இடதுசாரி கட்சிகளோடு அதிமுகவும் பங்கேற்றது.

  அதன்பிறகு கடந்த பிப்ரவரி 2, 3

  தேதிகளில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தனர். அதன்பிறகு அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பல முறை பேசினோம். மார்ச் 4-ஆம் தேதி மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கு வந்த அதிமுக குழுவினர், "மகிழ்ச்சியாக சேர்ந்தோம், மகிழ்ச்சியாக பிரிவோம்' என உறவை தன்னிச்சையாக முறித்து விட்டுச் சென்று விட்டனர். அதன் பிறகு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

  பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை.  2ஜி அலைக்கற்றை ஊழலில் திமுகவைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை நாடறியும்.

  எனவே, அதிமுகவுடன் உறவு முறிந்ததால் திமுகவுடன் உடன் பாடு வைக்க வேண்டாம் என  மார்க்சிஸ்ட் மாநிலக் குழுவில் முடிவு செய்தோம். இடதுசாரி கட்சிகளுடனான உறவை முறித்துக் கொண்டதற்கான காரணத்தை அதிமுக அறிவிக்கவில்லை.

  வகுப்பு வாதத்தை எதிர்ப்பதிலும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதிலும் இடதுசாரிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

  அடுத்த சில தினங்களில் போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்களையும் இரு கட்சிகளும் அறிவிப்போம் என ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai