சுடச்சுட

    

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: ஜி.கே. வாசன்

    By dn  |   Published on : 12th March 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    c11dgkv

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

    இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. மீண்டும் ஒரு வசந்த காலம் காங்கிரஸூக்கு வந்துள்ளது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தொகுதிகளிலும் கை சின்னத்தை மக்களிடம் கொண்டுச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தனித்துப் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கட்சி மேலிடம் விரைவில் வெளியிடும்.

    1997-இல் தனித்துப் போட்டியிட்டு 18 சதவீத வாக்குகளைப் பெற்றோம். 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 45 லட்சம் வாக்குகளைப் பெற்றதோடு 27 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 1999-இல் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது 10 சதவீத வாக்குகள் கிடைத்தன.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்று கணிசாமான, பாரம்பரியமான, நிரந்தர வாக்கு வங்கி உண்டு. அது இந்தத் தேர்தலில் அதிகரிக்குமே தவிர குறையாது.

    நிலையான ஆட்சியை வழங்கியது, மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆகியவற்றுக்காக காங்கிரûஸ மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்.

    2004-இல் 160 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற காங்கிரஸூக்கு 2009-இல் 205 இடங்கள் கிடைத்தது. எனவே, இந்தத் தேர்தலிலும் காங்கிரஸூக்கு வெற்றி கிடைக்கும்.

    வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட தேர்தல் பணிகள், வியூகங்களை விரைவாக அறிவிக்க வேண்டும் என கட்சி மேலிடத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

    வரும் 14-ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும்.

    சந்தர்ப்பவாதக் கூட்டணி: கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதால் வருத்தம் எதுவும் இல்லை. மற்ற கட்சிகள் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளன.

    தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கவில்லையே என பல கட்சிகள் வருத்தப்படுவார்கள் என்றார் ஜி.கே. வாசன்.

    முன்னதாக எம்.பி.க்கள் ஜே.எம். ஹாரூண், ராமசுப்பு, முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், மாநிலப் பொருளாளர் கோவை தங்கம், மாநில துணைத் தலைவர் ஞானசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், ஹசன் அலி, முன்னாள் மாநிலச் செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம். யுவராஜா உள்ளிட்டோருடன் ஜி.கே. வாசன் ஆலோசனை நடத்தினார்.

    "போட்டியிட விரும்பவில்லை'
    எனது சொந்தத் தொகுதியான மயிலாடுதுறை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருந்தாலும் இந்தத் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் 39 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். தேர்தலில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் என்னுடைய சுற்றுப்பயண விவரங்களை அறிவிக்க இருக்கிறேன். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர். அது குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் அறிவிப்பார் என்றார் ஜி.கே. வாசன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai