சுடச்சுட

    

    தமிழக மீனவர் விடுவிப்பில் மெத்தனம்: பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையுடன் பேச்சு

    By dn  |   Published on : 12th March 2014 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக மீனவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வரும் நிலையில், இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது.

    இலங்கையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முன்பாக, அந்த நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 177 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுவரை விடுவிப்பில்லை: பேச்சுவார்த்தைக்கு முன்பாக, தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இதுவரை இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் சுமுக சூழ்நிலையில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து, மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம்  கேட்டபோது நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, எங்களது பாஸ்போர்ட்டுகளை மீன்வளத் துறை அதிகாரிகள் பெற்று, சென்னையில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் அளித்துள்ளனர். திருச்சியில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த முறையான அழைப்பும் பயணச்சீட்டுகளும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) இரவு வரை எங்களிடம் அளிக்கப்படவில்லை. புதன்கிழமை பிற்பகலுக்குள் பேச்சுவார்த்தையின் நிலைமை குறித்து தெரிய வரும் என்று கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai