Enable Javscript for better performance
திமுகவுக்கு வாக்களிப்பதும், மோடிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்: தவ்ஹீத் ஜமாஅத்- Dinamani

சுடச்சுட

    

    திமுகவுக்கு வாக்களிப்பதும், மோடிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்: தவ்ஹீத் ஜமாஅத்

    By dn  |   Published on : 12th March 2014 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    11dpc

    திமுகவுக்கு வாக்களிப்பதும், நரேந்திர மோடிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜைனுலாபுதீன் தெரிவித்தார்.

    சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

    எனவே, இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் முடிவு எடுத்துள்ளோம்.

    தமிழகம் முழுவதும் அனைத்து முஸ்லிம்களையும் அதிமுகவுக்கு வாக்களிக்கச் செய்ய முனைப்புடன் பிரசாரம் செய்வோம்.

    தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் தான். எனவே, தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க திமுக, அதிமுக என பல கட்சிகள் அதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆனால், இட ஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதி அளித்துள்ளதால் அதிமுகவை ஆதரிக்கிறோம். நரேந்திர மோடி தனது நண்பர் என கருணாநிதி கூறியுள்ளார். மோடிக்கு எதிராக அவர் எதையும் கூறவில்லை.

    தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு திமுக ஆதரவளிக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பதும், நரேந்திர மோடிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என்றார் ஜைனுலாபுதீன்.

    பேட்டியின் மாநிலச் செயலாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai