சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் குடிநீர் இயந்திரங்கள் அகற்றம்: ராமதாஸ் கண்டனம்

    By dn  |   Published on : 12th March 2014 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadas

    திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் இயந்திரங்களை தேர்தல் ஆணையம் அகற்றியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

    திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டங்கள் ஆகும்.

    இந்த மாவட்டங்களில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்களும், பாமக நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் கொண்டு வந்து, அனுமதி பெற்று, 10 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைத்தனர்.

    மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த குடிநீர் இயந்திரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

    உண்மையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டதில் எந்த விதமான விதி மீறல்களும் இல்லை. 10 இடங்களிலுமே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு விட்டன.

    எனவே அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட இயந்திரங்களை அதிகாரிகள் அகற்றியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வரையப்பட்டிருந்த தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட்டுவிட்டன.  குடிநீர் இயந்திரங்களுக்கு தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அகற்றப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை மீண்டும் அதே இடங்களில் அமைக்க ஆணையிடுவதுடன், இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai