சுடச்சுட

    

    பறக்கும்படையிடம் சிக்கிய அரிய வகை கடல் குதிரைகள் பறிமுதல்

    By dn  |   Published on : 12th March 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl11kku1

    சொகுசுப் பஸ்ஸில் கடத்தப்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினமான 15 கிலோ கடல் குதிரைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை மண்டல துணை வட்டாட்சியருமான பொன். பாலு தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், மயிலாடுதுறையை அடுத்த அகரகீரங்குடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவாரூரிலிருந்து - சென்னை நோக்கி சென்ற சொகுசுப் பஸ்ûஸ மறித்து சோதனையிட்ட போது, பஸ்ஸின் பின்புறத்தில் பொருட்கள் வைக்குமிடத்தில், 3 பைகளில் பதப்படுத்தப்பட்ட நிலையில் அரிய வகை கடல் குதிரைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 15 கிலோ எடையுள்ள அந்த கடல் குதிரைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். சீர்காழி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai