சுடச்சுட

    

    பாலிடெக்னிக் அனுமதி: தாமத தொகையுடன் மார்ச் 15 வரை விண்ணப்பிக்க அனுமதி

    By dn  |   Published on : 12th March 2014 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலிடெக்னிக் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதி பெற தாமதத் தொகையுடன் மார்ச் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை நடத்தும் நிறுவனங்களை புதிதாகத் தொடங்க ஏ.ஐ.சி.டி.இ.-யின் அனுமதி பெறுவது அவசியம். இதுபோல் ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி புதுபிப்பு பெற வேண்டும்.

    வரும் 2014-15 ஆம் கல்வியாண்டில் அனுமதி மற்றும் அனுமதி புதுபிப்புக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 15 கடைசித் தேதி என ஏஐசிடிஇ அறிவித்திருந்தது.

    பின்னர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த கால அவகாசம் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏஐசிடிஇ வழங்கியுள்ளது. அதன்படி, புதிய அனுமதி மற்றும் அனுமதி புதுபிப்பு விண்ணப்பங்களை தாமதத் தொகையுடன் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் கே.பி. ஐசக் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai