Enable Javscript for better performance
போர்வெல் லாரி கவிழ்ந்து இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தென்காசி அருகே போர்வெல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

    திருச்செங்கோட்டை சேர்ந்த போர்வெல் லாரி ஒன்று, செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம் எரிமேலியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வன்னிகோனந்தல் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரி தென்காசி அருகே சிவராமபேட்டை மருதப்பபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியிலிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வினோத்குமார் (21), பரமேஸ்வர் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    லாரியில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித்குமார் (21), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பி.தேவ்குமார் (21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரா.ராமதாஸ் (22), ஓட்டுநரான சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோர்  காயமடைந்தனர். விபத்து குறித்து ஆய்க்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai