சுடச்சுட

    
    ngl11mon

    மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு பெரிய சக்கர தீவட்டி அலங்கார பவனி நடைபெற்றது.

    இக்கோயில் மாசிப் பெருந்திருவிழா மார்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பஞ்சாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல், யானை மீது களபம் பவனி வருதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் 9-ஆம் நாள் (மார்ச் 10) காலை அம்மனுக்கு பஞ்சாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்ட சாஸ்தா ஆலயத்திலிருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தன.

    காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும், தொடர்ந்து பெரிய சக்கர தீவட்டி அலங்கார பவனி வருதலும் நடைபெற்றன.

    10-ஆம் திருவிழாவன்று (மார்ச் 11) இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பவனியும், ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடைபெற்றன.

    கோயில் 10-ஆம் திருவிழாவையொட்டி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai