Enable Javscript for better performance
ராகுல், மோடி பிரதமராக ஆதரவு இல்லை: கருணாநிதி- Dinamani

சுடச்சுட

    
    karuna

    "பாஜகவின் நரேந்திரமோடி, காங்கிரஸின் ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு இல்லை. இந்த இருவரும் அல்லாத ஒருவரையே பிரதமராக முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்வோம்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கருணாநிதி அளித்த பேட்டி:

    கேள்வி: திமுக கூட்டணிக்கு வர இடதுசாரிகள் மறுத்துவிட்டனரே?

    பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.

    கே: ஜெயலலிதா பிரதமராக முயற்சி செய்வதால், தமிழக மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பர் என்று சொல்கிறார்களே?

    ப: அவர்கள் முயற்சி செய்வதும் தெரியாது. தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பார்களா என்பதும் தெரியாது.

    கே: பாஜக சார்பில் அமைந்துள்ள புதிய கூட்டணி, திராவிடக் கட்சிகளுக்கு எந்த அளவுக்குச் சாதக பாதகங்களை ஏற்படுத்தும்?

    ப: ஏற்கெனவே எப்படி அமைந்ததோ, அப்படித்தான் இப்போதும் அமையும்.

    கே: பாஜக மோடியையும், காங்கிரஸ் ராகுலையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. திமுக யாரை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும்?

    ப: இவர்கள் அல்லாத ஒருவரை.

    கே: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டி பற்றி உங்கள் கருத்து?

    ப: மக்களுக்குத்தான் நல்லது.

    கே: காங்கிரஸ் கட்சி உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்களே?

    ப: இவை எல்லாம் உங்கள் யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. ஆனால் நீங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை இந்த அளவு இழிவு படுத்துகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    கே: உங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

    ப: எங்களைப் பொருத்தவரை வேறு யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    எனவே, எந்தக் கட்சியினர் வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கவில்லை.

    கே: தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறீர்கள். அது உங்களுக்கு பின்னடைவு இல்லையா?

    ப: எந்தப் பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai