சுடச்சுட

    

    ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மைய இயக்குநர் நியமனம்

    By dn  |   Published on : 12th March 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தின் முதல் பெண் இயக்குநராக லதாபிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்த மைக்கேல் வேதசிரோமணி கடந்த ஆண்டு பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து தாற்காலிக இயக்குநராக மத்திய விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறையின் இணை இயக்குநர் சுதீர்குமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இம்மையத்தின் புதிய இயக்குநராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த லதாபிள்ளை நியமிக்கப்பட்டள்ளார்.

    பல ஆண்டுகள் கல்வித் துறையில் அனுபவமுள்ள லதாபிள்ளை திங்கள்கிழமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai