சுடச்சுட

  
  jakan

  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக மாவட்டச் செயலர் என். பெரியசாமியின் இளைய மகன் என்.பி. ஜெகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 35 வேட்பாளர்களில், வாரிசு என்ற அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு பெற்றவர் என்.பி. ஜெகன் மட்டும்தான். முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், ஐ. பெரியசாமி ஆகியோர் முயற்சி செய்தும் அவர்களது மகன்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தலைமையிடத்தில் கறாராகப் பேசி பெரியசாமி வாய்ப்பு பெற்றுவிட்டார் என்றும், தூத்துக்குடி மாவட்ட திமுகவில் பெரியசாமியை விட்டால் வேறு ஆள் கிடையாது என சிலரை சீண்டும் வகையிலும் பெரியசாமியின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெரியசாமியுடன் கூடவே இருக்கும் சிலரோ, அண்ணாச்சியிடம் தலைமை சில நிபந்தனைகளை பெற்றுக்கொண்டே ஜெகனுக்கு வாய்ப்பு வழங்கியதாகவும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசுக்கு வாய்ப்பு கேட்கக் கூடாது என்றும், அப்போது ஏதாவது செய்து தலைமைக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்ததாகவும் கூறுகிறார்கள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai