சுடச்சுட

    

    வேட்பாளர்களின் செலவுக் கணக்கை கண்காணிக்க சிறப்பு தனிப்படை: பிரவீண்குமார்

    By dn  |   Published on : 12th March 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    praveenkumar

    வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்கும் வகையில் வருமான வரித் துறையினரைக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்படுகிறது.

    இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கணக்கிடவும், ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய

    தனிப்படை அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

    மேலும், 40 தொகுதிகளிலும் செலவுக் கணக்குகளை மேற்பார்வையிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். அவர்களுக்கு உதவிடும் வகையில், உதவி பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    9.95 லட்சம் பேர் விண்ணப்பம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 9.95 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அதில், அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 385 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 934 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    பெரம்பலூரில் 8 ஆயிரத்து 527 விண்ணப்பங்களும், அரியலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 987 விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு, இரண்டு வாரங்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    தமிழகத்தில் சிறப்பு முகாமின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தவர்களின் எண்ணிக்கை: (மாவட்டவாரியாக விவரங்கள்):

    திருவள்ளூர் 62,971

    சென்னை 85,884

    காஞ்சிபுரம் 1,00,385

    வேலூர் 49,991

    கிருஷ்ணகிரி 19,667

    தருமபுரி 16,763

    திருவண்ணாமலை 15,632

    விழுப்புரம் 25,898

    சேலம் 44,822

    நாமக்கல் 16,226

    ஈரோடு 24,500

    நீலகிரி 3034

    கோவை 74,906

    திண்டுக்கல் 21,890

    கரூர் 9,238

    திருச்சி 31,501

    பெரம்பலூர் 8,527

    கடலூர் 27,002

    நாகப்பட்டினம் 14,294

    திருவாரூர் 11,104

    தஞ்சாவூர் 27,848

    புதுக்கோட்டை 18,868

    சிவகங்கை 15,726

    மதுரை 50,592

    தேனி 21,202

    விருதுநகர் 22,008

    ராமநாதபுரம் 16,455

    தூத்துக்குடி 26,391

    திருநெல்வேலி 46,149

    கன்னியாகுமரி 21,335

    அரியலூர் 8,987

    திருப்பூர் 54,609

    மொத்தம் 9,95,305

     

    வேட்புமனு தாக்கல்: இரண்டு நாள்களுக்கு கிடையாது: மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இரண்டு நாள்களுக்கு கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மார்ச் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பு என்பதாலும், அந்த இரண்டு நாள்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது. தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும், ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    அதில், மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் விடுமுறை வருவதால் அந்த தினங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாது. பிற நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அளிக்கலாம் என்று பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai