சுடச்சுட

  
  nk

  காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருப்பதால் இதுவரை அமைச்சர்களாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களாகவும் இருந்தவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வது தொடர்பாக தமிழறிஞரும், காங்கிரஸ் முன்னாள் பிரமுகருமான நெல்லை கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள வேண்டுகோள்:

  தமிழ்நாட்டில் கூட்டணி கிடையாது எனில் நல்ல காங்கிரஸ்காரர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவது வாடிக்கை. அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், மேலிடத்தில் தொடர்புடையவர்களாகவும் இருப்பவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். இன்று இயக்கத்தின் மரியாதையைக் காப்பாற்ற போட்டியிடுபவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார்கள்.

  அடுத்த தேர்தலில் கூட்டணி வரும்போது போட்டியிட்டு அமைச்சர்கள் ஆகி விடுவர்.

   எனவே, கட்சியின் மானம் காப்பதாகக் கருதிக்கொண்டு, அருள் கூர்ந்து நல்லவர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என்று உங்களின் உண்மையான நண்பன் வேண்டி நிற்கின்றேன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai