சுடச்சுட

    

    இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீஸார் கூறியதாவது:

    இந்திய கடலோர காவல்படையின் ராஜ்தரங் கப்பல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இந்திய எல்லையில், இலங்கை மீனவர்கள் இயந்திரப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இதையடுத்து, அந்தப் படகில் இருந்த இலங்கை மீனவர்கள் சதான் தரங்கா (31), ரானிலாந்து (34), பி.எம்.புத்திகா சதான் சமீர் (24), இ.ஜெ.சுபுல் ரங்கானா (27), வஸந்தகுமார் ஸ்ரீவர்த்தனே (34) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், அவர்களது படகையும், அவர்கள் வைத்திருந்த ஆயிரம் கிலோ எடை கொண்ட மீன்களையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து, சென்னை துறைமுகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai