சுடச்சுட

    

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம், பகுதியைச் சேர்ந்த 83 மீனவர்களை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்து உத்தரவிட்டுள்ளது,

    ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த ஜனவரி 29ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற பங்குராசு, பிரபு, விக்லி, கீதன், ரமேஷ் உள்ளிட்ட 38 மீனவர்கள், பிப்ரவரி 2 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் குணசேகரன், பாண்டி உள்ளிட்ட 4 பேர், பிப்ரவரி 4ஆம் தேதி பன்னீர், கங்காதரன், குமார், பூப்பிள்ளை, ஜோதிராஜன் உள்ளிட்ட 20 மீனவர்கள், பிப்ரவரி 13 ஆம் தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 83 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் மார்ச் 12ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, மீன்வர்கள் 83 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 83 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். லெனின்குமார் 83 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார்.

     விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 83 பேரும் இன்னும் ஒருசில நாள்களில் ராமேசுவரம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai