Enable Javscript for better performance
காரைக்காலில் விரைவில் நவீன ரேடார் கருவி: எஸ். ஆர். ரமணன் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் விரைவில் நவீன ரேடார் கருவி: எஸ். ஆர். ரமணன் பேச்சு

    By dn  |   Published on : 13th March 2014 11:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramanan

    காரைக்காலில் வானிலை ஆய்வுக்காக விரைவில் நவீன ரேடார் கருவி அமைக்கப்படவுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்தார்.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில், நில அறிவியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ""கோஸ்டல்டெக் 2014'' என்கிற இடம்சார் தொழில்நுட்பம் மூலமாக கடல் சார்ந்த வளங்கள், மேலாண்மை உத்திகள் குறித்த இரு நாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

    உலக அளவில் 5 சதப் புயல் வங்காள விரிகுடாவிலும், ஒரு சதம் அரபிக் கடலிலும் உருவாகிறது.

    இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், மாலத்தீவு, ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்படும் புயல் சின்னம் குறித்து தில்லியில் உள்ள மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் அளிக்கப்படுகிறது. இந்த மையத்தில் சக்தி வாய்ந்த அமெரிக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க முடிவதால், கடல் அலைகளை வைத்து புயல் வருவது கணிக்கப்படுகிறது.

    புயல் வருவதை முன்னதாக அறிவதில் ரேடார் கருவி முக்கியப் பங்கு வகிக்கிறது. வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னத்தைக் கண்டறிய சென்னை, மசூலிப்பட்டினத்தில் நவீன ரேடார் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல, காரைக்காலிலும் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

    கடந்த காலத்தில் புயல் எந்தப் பாதையில் சென்றதோ, அதைக் கணக்கில் கொண்டு புயல் கரையைக் கடக்கும் பாதை கணக்கிடப்படுகிறது. மேல் திசையில் என்ன காற்று வீசுகிறதோ, அதைக் கணக்கில் கொண்டு எதிர்காலத்தில் எந்த அளவுக்குப் புயல் காற்று வீசும் என்பது கணிக்கப்படுகிறது. புயல் நகரும்போது நேர் கோட்டில் சென்றால், அது எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் கணிப்பது எளிது. அதுவே, வளைந்து, வளைந்து சென்றால் எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் கணிப்பது கடினம். அதற்கும் இப்போது நவீன கருவிகள் வந்துள்ளதால், கணினி மூலம் கணித்துவிடமுடிகிறது என்றார் ரமணன்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித்தார். பொதுப் பணித் துறை நிலத்தடி நீர் பிரிவின் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கே. சந்தானம், பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம், அறிவியல் புலத் தலைவர் எம். ஜகதீசன் உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக, தொழில், நில அறிவியல் துறைத் தலைவர் இரா. பாஸ்கரன் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் க. சங்கர் நன்றி கூறினார்.

    அடுத்த புயல் - ப்ரியா

    தில்லியில் உள்ள மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையத்துக்கு உள்பட்ட 8 உறுப்பு நாடுகள் இணைந்து புயல் சின்னத்துக்கான பெயர்களைச் சூட்டுகின்றன. இந்த 8 நாடுகள் சேர்ந்து 64 பெயர்களை உருவாக்கியுள்ளன. இதில், இந்தியா தரப்பில் அக்னி, ஆகாஷ், லெகர் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன. வங்கதேசம் தரப்பில் நிஷா, ஹெலன் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அடுத்த புயலுக்கு ப்ரியா என்ற பெயரை இலங்கை சூட்டியுள்ளது என்றார் ரமணன்.

    தில்லியில் உள்ள மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையத்துக்கு உள்பட்ட 8 உறுப்பு நாடுகள் இணைந்து புயல் சின்னத்துக்கான பெயர்களைச் சூட்டுகின்றன. இந்த 8 நாடுகள் சேர்ந்து 64 பெயர்களை உருவாக்கியுள்ளன. இதில், இந்தியா தரப்பில் அக்னி, ஆகாஷ், லெகர் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன. வங்கதேசம் தரப்பில் நிஷா, ஹெலன் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அடுத்த புயலுக்கு ப்ரியா என்ற பெயரை இலங்கை சூட்டியுள்ளது என்றார் ரமணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai