சுடச்சுட

    

    சிதம்பரத்தில் திருமா, திருவள்ளூரில் ரவிக்குமார் போட்டி

    By dn  |   Published on : 13th March 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    C12DDPI

    திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

    இதற்கான அறிவிப்பை திருமாவளவன் புதன்கிழமை வெளியிட்டார்.

    திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வேளச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்குப் பிறகு திருமாவளவன் கூறியது: காட்டுமன்னார் கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரவிக்குமார். சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க நாடாளுமன்றத்துக்குச் செல்ல உள்ளார். இந்த முறை சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.

    40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.

    திமுக தலைமையிலான மதச்சார்பின்மை கூட்டணியில் சேர, காங்கிரஸ் கட்சி வந்தால் ஆதரிப்போம். நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி, ஆற்றல் உடையவர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவருக்கு கொள்கை-கோட்பாடு கிடையாது.

    இடதுசாரி கட்சிகள் அவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் திருமாவளவன் வெளியிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai