சுடச்சுட

    

    திமுகவில் வி.பி.துரைசாமி தலைமையில் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமனம்

    By dn  |   Published on : 13th March 2014 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vpdurai

    திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தலைமையில் தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் க.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆங்காங்கு மாவட்டங்களில் எழும் பிரச்னைகள் தொடர்பாக தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொண்டு ஆவன செய்யவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளை தலைமைக் கழகம் சார்பாகக் கவனித்திடவும் தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

    குழுவுக்கு துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை வகிக்கிறார். அந்தக் குழுவில் அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், வழக்குரைஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இ.பரந்தாமன் மற்றும் சிவபிரகாசம், துறைமுகம் காஜா ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai