Enable Javscript for better performance
திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: கருணாநிதி- Dinamani

சுடச்சுட

    
    karuna

    திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

    சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு விழாவில் கருணாநிதி பேசியது:

    நெருக்கடி காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்தார். அப்போது ஆற்காடு வீராசாமியும், சிட்டிபாபுவும் இல்லாமல் இருந்திருந்தால் ஸ்டாலின் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்.

    தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், தன் இயக்கத் தோழனைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆற்காடு வீராசாமி நினைத்தார்.

    அதுபோன்ற தொண்டர்கள் திமுகவில் தற்போதும் தொடர்கின்றனர். திமுகவை யாரும் வீழ்த்த முடியாது. பலவீனப்படுத்த முடியாது.

    பெரியாரால், அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம், இன்றைக்கும் வைரம் பாய்ந்த மரமாக இருக்கிறது என்றார் கருணாநிதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai