சுடச்சுட

    

    கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் பாஜக தலைவர்கள் தவித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைந்துள்ள 3-ஆவது அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

    2 மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வழியாகக் கூட்டணியை இறுதி செய்த பாஜக தலைவர்கள், தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    மார்ச் 7-ஆம் தேதி வெளிப்படையாக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக தலைவர்கள், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தினர். 14 தொகுதி என உறுதி அளிக்கப்பட்ட பிறகே கூட்டணிக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ளது. அதனால் எண்ணிக்கை விஷயத்தில் அக்கட்சியுடன் எந்த முரணும் இல்லை. ஆனால், விடாப்பிடியாக 10 தொகுதிகளை பாமக கேட்பதும், பாமகவுக்கு இணையான தொகுதிகளை மதிமுக கேட்பதும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    ஒரு வழியாக பாமகவை சமாதானப்படுத்தி 8 தொகுதிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இப்போது வைகோவும் 8 தொகுதிகள் வேண்டும் என்பதால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மதிமுகவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க பாஜக தயங்குகிறது.  மார்ச் 14-ஆம் தேதி தேமுதிக பிரசாரம் தொடங்குவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீóட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்தால்தான் அவர் பிரசாரத்தை தொடங்க முடியும்.

    எனவே, அதற்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    ராஜ்நாத் சிங் வருகை தள்ளிவைப்பு: தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தொகுதிப் பங்கீடு முடியாததால் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் சென்னை வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 14-ஆம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும். கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்ற தகவல் தவறானது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்றார்.

    சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க பாமக மறுப்பதால் பாஜக கூட்டணியில் சிக்கல் நீடிப்பததாக் கூறப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் ராஜ்நாத்சிங் சென்னை வந்து கூட்டணியை முறைப்படி அறிவிப்பார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai