சுடச்சுட

    

    நாமக்கல் அருகேயுள்ள கோயிலில் சிவலிங்கம் மீது விழும் சூரியக் கதிர்கள்: திரளான பக்தர்கள் தரிசனம்

    By dn  |   Published on : 13th March 2014 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk12kvl

    நாமக்கல் அருகே அ.மேட்டுப்பட்டி கோயிலில் சிவலிங்கம் மீது சூரியக் கதிர்கள் விழுந்த அரிய நிகழ்வு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி, தினமும் அதிகாலை கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாமக்கல்- திருச்சி சாலையில் வளையப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் சிவகாமசுந்தரி உடனமர் சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கிழக்கு நோக்கி 4 அடி உயரத்தில் சிவலிங்கமும், தெற்கு நோக்கி நான்கரை அடி உயரத்தில் அம்மனும் வீற்றிருக்கின்றனர்.

    வட மாநிலக் கோயில்களைப் போல இந்தக் கோயிலிலும் கோபுரங்கள் பிரமிடு வடிவில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 27-ஆம் தேதி முதல் பங்குனி 1-ஆம் தேதி வரையில் சூரியனின் சுற்றுப் பாதையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, இந்த 5 நாள்களும் அதிகாலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை சூரியக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் நாளான புதன்கிழமை காலை இந்த சூரிய ஒளிக் கதிர் சிவலிங்கத்தின் மீது விழும் நிகழ்வைக் காண கோயிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.35-க்கு சூரியன் உதயமானதும் சிவப்பு நிற ஒளிக் கதிர்கள் நந்தியின் மீது விழுந்து அதன் நிழல் சிவலிங்கத்தின் மீது விழுந்தது.

    பின்னர், சூரியக் கதிர்கள் நேராக சிவலிங்கத்தின் மீது விழுந்து சிவலிங்கம் ஜொலித்தது. சுமார் 12 நிமிஷம் இந்த அரிய நிகழ்வு நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் சிவாய நம என்று கோஷ மிட்டவாறு சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற சனிக்கிழமை (மார்ச் 15) வரை இந்த அரிய நிகழ்வு நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai