சுடச்சுட

  
  rmsbalam1

  பாம்பன் ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பாலத்தில் புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

   சென்னை  தலைமை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்துக்கு மர்ம நபர்களிடம் இருந்து பாம்பன் ரயில் பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது.

  அதனையொட்டி உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி ரயில் பாலத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தில் ரயில்வே போலீஸார் ரயில் பாலத்தில் தண்டவாளங்கள், இரும்பு கர்டர்கள், தூக்கு பால பகுதி, பில்லர்கள் ஆகிய இடங்களில் சோதனையிட்டனர். அத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  மேலும் வெடிகுண்டு  நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai