சுடச்சுட

    
    12pyp4

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியாக செயல்படும் என்றும், புதுவை மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது முதல் எங்களுடன்தான் இணைந்து செயல்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றார்.

    இலவசத் திட்டங்களை செயல்படுத்த நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீங்கள் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறீர்களே என கேட்கிறீர்கள், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நரேந்திர மோடி அவ்வாறு கூறியுள்ளார்.

    எனினும் நாங்கள் ஏழை, எளியோர் நலன் பெற வேண்டியிருப்பதால் இலவசத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளது. அதன் அவசியத்தை அவரிடம் தெரிவிப்போம்.

     புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தரும் கோரிக்கையை நாங்கள் உறுதியாக வலியுறுத்துவோம். அதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளோம்.

     பாமக சார்பில் அவர்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு அன்புமணி உங்களிடம் பேசியுள்ளாரே எனக் கேட்கிறீர்கள், பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சியினர் உள்ளனரோ அவர்களும் எங்கள் அணியில் தான் உள்ளனர் என்றார் ரங்கசாமி.

    வேட்பாளர் ராதாகிருஷ்ணன்: புதுச்சேரி அடுத்த குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் மகன் ராதாகிருஷ்ணன். கடந்த 1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், மதிமுகவிலும் சிறிது காலம் இணைந்திருந்தார்.

    முதன்முறையாக கடந்த 2001ஆம் ஆண்டு குருவிநத்தம் பேரவைத் தொகுதியில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அப்போது குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் பதவி வகித்தார்.

    அதன்பின் 2006ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதே குருவிநத்தம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

    தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் பாகூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    ÷இதற்கிடையே கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அப்போதிருந்தே அவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வந்தது. அதே போல ராதாகிருஷ்ணனை என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai