சுடச்சுட

  
  ttp12ph1

  திருவாரூர் மாவட்டம்,  முத்துப்பேட்டை - ஜாம்பவானோடை தர்காவின் பெரிய கந்தூரி விழாவில் புனித சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் ஷேக்தாவூத் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் விழா புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

  முத்துப்பேட்டை ஜாம்பவானோடையில் உள்ள ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா 712 ஆண்டுகள் பழைமையானது. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்யும் சிறப்புடையது.

  மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், மதமாச்சரியமின்றி இந்த தர்காவில் தங்கி குணமடைந்து வருவது தனிச்சிறப்பு.

  ஆண்டுதோறும் நடைபெறும் பெரிய கந்தூரி விழாவின் தொடக்கமாக புனிதக் கொடியேற்றும் விழா மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது.

  மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, விஸ்வகர்ம சங்கத்தினர் ஆண்டுதோறும் கந்தூரி விழாவுக்கான புனிதக் கொடியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  கொடியேற்றம் நடைபெற்ற தினத்திலிருந்து தினசரி சிறப்பு தொழுகைகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

  திங்கள்கிழமை இரவு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட புனித சந்தனக் குடங்கள் ஊர்வலத்தை தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாகிப் தலைமையில், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் காளிராஜ்மகேஷ்குமார் தொடக்கிவைத்தார்.

  புனித சந்தனக் குடங்கள் ஆற்றங்கரை தர்கா, அம்மா தர்கா வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் தர்காவை 3 முறை வலம் வந்து புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஷேக்தாவூத் ஆண்டவர் சமாதியில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணபதி தலைமையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai