சுடச்சுட

    

    விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திரர் நடத்தி வைத்தார்

    By dn  |   Published on : 13th March 2014 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayandra

    அரக்கோணத்தை அடுத்த மின்னல், நரசிங்கபுரம் ஸ்ரீசுந்தர விநாயகர் கோவில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று மகாகும்பாபிஷேகத்தை நடத்தி

    வைத்தார்.

    அரக்கோணத்தை அடுத்த மின்னல் ஊராட்சியில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீசுந்தரவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக இக்கோவிலில் புனருத்தாரண பணிகள் நிறைவேற்றப்பட்டு, ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீஉண்ணாமுலை அம்மையார், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நவக்கிரக மூர்த்திகள் ஆகிய சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டும் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்கள் அழகூட்டப்பட்டன. மகாகும்பாபிஷேக விழா மார்ச் 10ம் தேதி துவங்கியது.

    தொடர்ந்து பல கால சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் புதன்கிழமை காலை 9மணி அளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கோவில் அமைந்துள்ள பெரியதெரு முனையில் இருந்து பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதையடுத்து காலை 9.30 மணியளவில் ராஜகோபுரம், மூலவர் விமானம், ஸ்ரீசுந்தர விநாயகர், வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீஉண்ணாமுலை அம்மையார் உடனுறை அண்ணாமலையார், நவக்கிரஹ மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு மணி நேரம் சஹஸ்ரநாம அர்ச்சனையை கோவில் மூலவர் சன்னிதானத்தில் செய்தார்.

    விழாவுக்கு நரசிங்கபுரம் வீ.இரா.விஸ்வநாத முதலியார், பு.வெ.ஏகாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரசிங்கபுரம் கிராமப் பிரமுகர்கள் சாம்பசிவமுதலியார், செ.பூ.வடிவேல், ப.மு.பஞ்சாட்சரம், வி.இல.வேணுகோபால் ஆகியோர் வரவேற்றனர்.

    விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் எம்.பாண்டியன், முன்னாள் எம்.பி. சி.கோபால், உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) பி.பூபாலன், தமிழக கல்வித் துறை உயர் அதிகாரிகள் எஸ்.கண்ணப்பன், பி.குப்புசாமி, தொழிலதிபர் மகாலிங்கஐயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கோயில் நிர்வாகக் குழு தலைவர் வி.ஆர்.வி.தீனதயாள முதலியார், உறுப்பினர்கள் கே.எஸ்.பன்னீர்செல்வம், பி.வி.தெய்வசிகாமணி, பி.எம்.நாகரத்தினம், வி.பி.முருகன் உள்ளிட்டோருடன் கிராம இளைஞர்களும் அச்சுதானந்த பஜனைசபையாரும், கிராம பொதுமக்களும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்

    திருந்தனர்.

    விழாவையொட்டி, கிராம இளைஞர்கள் சார்பில் மூன்றாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai