சுடச்சுட

  
  12kanna1c

  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயிலில் திருவிழாவில் முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் திருவீதியுலா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கடந்த மார்ச் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  திருவீதியுலாவின்போது, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் முன்செல்ல புஷ்ப அலங்காரத்துடன் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய 4 சமயக்குறவர்களைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள் ராஜவீதிகளில் அணிவகுத்து உலா வந்தனர். ஊர்வலத்தின்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நகராட்சி தண்ணீர் வாகனம் மூலம், சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, வெப்பத்தின் தாக்கத்தை தணித்தனர். மேலும் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க ராஜவீதிகளில் நீர்மோர், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai