சுடச்சுட

    

    அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    By dn  |   Published on : 14th March 2014 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    security

    மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டுக்கு தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் துண்டுப் பிரசுரம் கிடந்தது தெரிய வந்ததையடுத்தும், மதுரையில் தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையிலும், தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸார், உள்ளூர் போலீஸார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் என 28 பேர் வரை பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

    மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் காரைக்குடி பகுதிக்கு வருகை தரும் போது, இந்த வீட்டின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    காரைக்குடி அருகே மானகிரியில் ப. சிதம்பரம் வீட்டின் முன்பாக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai