சுடச்சுட

  

  அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்: பணியாளர்கள் நீக்கம்

  By dn  |   Published on : 14th March 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அம்மா உணவகங்களில் புதிய சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் வந்துள்ளதால் தாற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  அம்மா உணவகங்களில் சப்பாத்திகள் வழங்கப்பட்டு வருகின்றன. சப்பாத்தி தயாரிக்க ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட இயந்திரங்கள் எதிர்பார்த்தபடி இயங்கவில்லை. இதனால் இயந்திரங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. மேலும் சப்பாத்தி தேய்க்க ஒவ்வொரு உணவகத்துக்கும் 8 சுயஉதவிக்குழு பெண்கள் தாற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர்.

  இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 24 பெண்கள் ஒவ்வொரு உணவகத்திலும் பணி செய்தனர்.

  இந்நிலையில், புதிய இந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது 5,7,8,9,13 ஆகிய மண்டலங்களில் புதிய இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த மண்டலங்களில் பணிபுரிந்த தாற்காலிக பணியாளர்கள் 8 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai