சுடச்சுட

  
  soundarajan

  கம்யூனிஸ்ட் போட்டியிடாத தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வீர்கள்?

  காங்கிரஸ், பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, அதிமுக இதில் எந்தக் கூட்டணிக்கும் எங்கள் ஆதரவு இல்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். அதேவேளையில்,இந்தக் கூட்டணிகளையும், கட்சிகளையும் எதிர்க்கும் வேட்பாளர்களை ஆதரித்து கம்யூனிஸ்ட்டுகள் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

  ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்டுகள் பிரசாரம் செய்வார்களா?

  மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநில செயற்குழு

  கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம். காங்கிரஸ், பாஜக, திமுக ஆகிய கட்சிகளை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுவதை வரவேற்கிறோம்.

  முதலில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகின்றன என்பது தெரிய வேண்டும். அது தெரிந்துவிட்டால், யாருக்கு ஆதரவு அளிப்பது என நிச்சயமாக முடிவெடுக்கப்படும்.

  கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், அதிமுகவை விமர்சித்து பிரசாரம் செய்வீர்களா?

  நாங்கள் கூட்டணியில் இருந்தபோதும் அதிமுக அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டிய விஷயங்களில் விமர்சித்துள்ளோம். மாநில அரசாங்கத்தின் சில அணுகுமுறை, செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே நாங்கள் செய்துள்ள விமர்சனங்கள் நிச்சயம் இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது இடம் பெறும். இது அகில இந்தியத் தேர்தல் என்பதால் மத்திய அரசின் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை பிரச்னைகள், வெளிநாடுகளுடன் நாம் போடும் ஒப்பந்தங்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பதே எங்களது பிரதான பிரசார நோக்கமாக இருக்கும்.

  தேர்தல் முடிந்து ஆட்சியமைப்பதில் இழுபறி இருந்தால் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

  காங்கிரஸ் தலைமையிலான அணியோ, பாஜக தலைமையிலான அணியோ மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதுதான் எங்கள் தேர்தல் நிலைப்பாடு. தேர்தல் முடிந்த பின்பு ஆட்சியமைப்பதில் பெரும்பான்மை இல்லாமல் சிக்கல் ஏற்பட்டால், இந்த இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உரிய உத்திகள் எதுவாக இருந்தாலும் எங்களது மத்தியக் குழு முடிவெடுத்து செயல்படுத்தும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai