Enable Javscript for better performance
ஆவணம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி அளியுங்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆவணம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி அளியுங்கள்

    By dn  |   Published on : 14th March 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆவணம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வியாழக்கிழமை மனு அளித்தனர். அந்த மனுவின் விவரம்:

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் என்று சந்தேக அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான நபர்கள்தான். ஆனால், லட்சக்கணக்கான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் சந்தேகத்துடன் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உள்ளாக்குவது வணிகத்தை முடக்கும்.

    பணம் மற்றும் பொருள்களை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை எவை, எவை என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். ரூ.3 லட்சம் வரை ரொக்கப் பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது.

    பணம், பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களை ஆய்வு செய்யும் பொறுப்பை வருமான வரித் துறை அதிகாரிகளிடம்தான் வழங்க வேண்டும். பெண்களின் உடைமைகளை சோதனையிடக் கூடாது.

    குற்றத்தை உறுதி செய்வதற்கு முன்பாக வாகனங்களில் உள்ளவர்களை விடியோ படம் எடுக்கக் கூடாது என்று அந்த மனுவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai