சுடச்சுட

    
    thangabalu1

    இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தங்கபாலுவும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவரது ஆதரவாளரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆர். தாமோதரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    2001 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தவர் தங்கபாலு. ராஜிநாமா கடிதத்தை அளித்தபோதே, இனிமேல் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்பதை தெரிவித்து விட்டார்.

    இதனை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுத் தலைவர் குலாம்நபி ஆசாத், தமிழகப் பொறுப்பாளர் முகில் வாஸ்னிக் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஒருவரே போட்டியிடாமல் புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், உள்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக தங்கபாலு இந்த முடிவை எடுத்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய தங்கபாலு முடிவு செய்துள்ளார் என்று தாமோதரன் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai