சுடச்சுட

  
  chidambaram_karthik

  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார வாகனம் (படம்) முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், அதைப் பயன்படுத்தும் வேட்பாளர் யார் என்ற கேள்வி அக்கட்சி நிர்வாகிகளிடையே சுழன்று வருகிறது.

  மக்களவைத் தேர்தலில், எதிர்பார்த்த கூட்டணி அமையாததால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ தனித்து விடப்பட்டுள்ளது. இதனால், அக்கட்சி தனித்து போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

  இந்தச் சூழலில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆலங்குடி, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் செய்வதற்காக வாகனம் தயாராகி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பிரசார வேன் முழுவதும் குளிரூட்டும் வசதியுடன், மேற்கூரையின் மையத்தில் நின்று, வேட்பாளர் திறந்தவெளியில் பிரசாரம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி. புஷ்பராஜ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்த வேன், கடந்த சில நாள்களாக புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியது: பிரசார வாகனம் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வாகனத்தை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடமிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து, தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். வாகனம் தயாராகி வருவதைப் பார்க்கும் போது, சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் ப. சிதம்பரம் அல்லது அவரது மகன் கார்த்தி இவர்களில் யாரேனும் ஒருவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai