Enable Javscript for better performance
சென்னை கடலில் விடப்பட்ட 1500 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை கடலில் விடப்பட்ட 1500 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

    By dn  |   Published on : 14th March 2014 11:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    what

    மெரீனா மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1500 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன.

    ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு இனப்பெருக்க காலமாகும். அப்போது இந்த வகை ஆமைகள் கடலுக்குள் இருந்து வெளியில் வந்து

    கடற்கரை மணலில் முட்டையிட்டு செல்லும்.

    அதன்படி, சென்னை கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான ஆமைகள் இதுவரை முட்டையிட்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதில் குஞ்சு பொறிக்கத் தகுதியான 20

    ஆயிரத்துக்கும் அதிகமான முட்டைகளை கடல் ஆமை பாதுகாப்புக் குழுவினர் கடற்கரை மணல் பகுதிகளில் பாதுகாத்து வருகின்றனர்.

    இனப்பெருக்கத்துக்காக கடற்கரைக்கு வரும் ஆமைகளில் பெரும்பாலானவை மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

    மெரீனாவில் இருந்து நீலாங்கரை வரை உள்ள கடல் பகுதியில் கடந்த இரு மாதங்களில் 230 ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீன் வலைகளில் சிக்கி இறந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனைக் கட்டுப்படுத்தினால் ஆமைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து மாணவர் கடல் ஆமைகள் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அகிலா கூறியதாவது:

    சென்னை கடல் பகுதியில் கடந்த இரு வாரங்களில் 1500 ஆமைக் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்துள்ளன. அவற்றை கடல் ஆமை பாதுகாப்புக் குழுவினர் பத்திரமாக கடலுக்குள் விட்டனர்.

    கோடையின் தாக்கம் இன்னும் அதிகரிக்காததால் முட்டையில் இருந்து வெளியே வந்த ஆமைகள் ஆரோக்கியத்துடன் காணப்பட்டன. வரும் நாள்களில் அதிக எண்ணிக்கையில் ஆமைக் குஞ்சுகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீன்வளத்தை பெரிதும் பாதிக்கும் ஜெல்லி மீன்களை அழிப்பதில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

    இந்த ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் ட்ராலர் விசைப் படகுகளில் பயன்படுத்தப்படும் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இதனைத் தடுக்காவிடில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் விரைவில் அழிந்து விடும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai