சுடச்சுட

    

    வணிகர்கள், வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சனிக்கிழமை (மார்ச் 15) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    சேலம் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜெயசீலன் தலைமையில், நகர அனைத்து வணிகர்கள் சங்க அறக்கட்டளைத் தலைவர் எஸ்.சி.நடராஜன், பெயிண்ட் - இரும்பு வணிகர்கள் சங்கத் தலைவர் வசந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான க.மகரபூஷணத்தை நேரில் சந்தித்து, முறையிட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, வணிகர்கள் சங்க பொதுச் செயலர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறியது:

    மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, சேலத்தில் வணிகர்கள், வியாபாரிகளிடம் சோதனை நடத்தும் அதிகாரிகள், அவர்கள் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.

    பணம் எடுத்துச் செல்பவர்கள் எந்தெந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். எனவே, தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சனிக்கிழமை (மார்ச் 15) சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai