சுடச்சுட

    
    praveen_meet

    மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நடத்தப்படும் வாகனச் சோதனைகள் மூலம் இதுவரை ரூ.6.06 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்புப் படைகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாள் (மார்ச் 5) முதல் இதுவரை (வியாழக்கிழமை) மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகள் மூலமாக ரூ.6 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 120 ரொக்கப் பணமும், 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகள், நகைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கருவூலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என்று பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai