சுடச்சுட

  

  இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மொத்தம் 140 பேர் புதன் மற்றும் வியாழக்கிழமை (மார்ச் 12, 13) ஆகிய இரு தினங்களில் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 76 பேர்,புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 40 பேர் ஆக மொத்தம் 116 மீனவர்கள் எல்லை தாண்டியதாக பல்வேறு தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, அனுராதபுரம் சிறையில் இருந்து வந்தனர்.

  இவர்கள் அனைவரும் புதன்கிழமை இலங்கையில் மன்னார் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  இவர்களைத் தவிர, எல்லை தாண்டியதாக ராமேசுவரத்தை சேர்ந்த 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 15 பேர் ஆக மொத்தம் 24 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 24 பேரும் இலங்கையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு,விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவின்படி, தமிழக மீனவர்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மொத்தம் 140 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 140 பேரைத் தவிர, போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 28.11.11 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும்,எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 32 மீனவர்கள் என மொத்தம் 37 பேர் இலங்கையில் சிறையில் இருந்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai