சுடச்சுட

    

    திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் சாவு

    By dn  |   Published on : 14th March 2014 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலம், பாகாலா அருகே திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 65 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் பாதயாத்திரையாக திருப்பதி, திருமலை நோக்கி வியாழக்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலம், பாகாலாவை அடுத்த கோனப்பரெட்டிவாரிபள்ளி பகுதியில் நடந்து சென்றனர்.

    அப்போது லேசான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில், வேகமாக வந்த கார் பக்தர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணபதி, தருமபுரியைச் சேர்ந்த வள்ளி, செல்வம், சின்னராஜு ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுச் செல்லப்பட்டனர்.பக்தர்கள் கூட்டத்தில் மோதிய கார் சற்று தூரத்தில் உள்ள மரத்தில் மோதி நின்றது. கார் டிரைவர் தப்பியோடி தலைமறைவானார். உயிரிழந்தோர் சடலங்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai