சுடச்சுட

  
  jaya

  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தூத்துக்குடியில் சனிக்கிழமை (மார்ச் 15) பிரசாரம் செய்கிறார். பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, தூத்துக்குடிக்கு சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் வருகிறார்.

  தூத்துக்குடி கதிர்வேல்நகரை அடுத்துள்ள சிவசக்திநகர் பகுதியில் ஏறத்தாழ 25 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில், அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து முதல்வர் பேசுகிறார்.

  முதல்வர் வருகையையொட்டி மேடையின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றக் கட்டடம் வடிவில் அமைக்கப்படும் மேடையில் நின்றபடி முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.

  பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் இருந்து வந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளும், தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai