சுடச்சுட

    
    praveen_kumar

    தேர்தல் பிரசார பயணச் செலவு சலுகையைப் பெற தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

    வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதியில் (மார்ச் 29) இருந்து ஏழு நாள்களுக்குள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து பிரவீண்குமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    தேர்தல் விதிகளின்படி, தங்கள் கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்யும் தலைவர்களின் விமானம் உள்ளிட்ட பிற போக்குவரத்துச் செலவுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது அவரது முகவரின் செலவுக்கணக்கில் அடங்காது. பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களின் பெயர்களை (அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் 40 பேர், அங்கீகாரம் இல்லாத கட்சி என்றால் 20 பேர்) தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையத்திடம், வேட்புமனு தாக்கல் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் அளிக்க வேண்டும். அவ்வாறு பெயர்கள் தெரிவிக்கப்படுவோருக்கு மட்டுமே சலுகை அளிக்கப்படும்.

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. எனவே, இந்தச் சலுகையைப் பெற விரும்பும் கட்சியினர், ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள்ளாக தேர்தல் ஆணையம் அல்லது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தனது அறிவிப்பில் பிரவீண்குமார் கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai