சுடச்சுட

    

    பதிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நகரத்தார்கள்: நல்லி குப்புசாமி செட்டியார்

    By dn  |   Published on : 14th March 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkdnool

    பதிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நகரத்தார்கள் என்று தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தெரிவித்தார்.

    காரைக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரோஜாவின் நகரத்தார் திருமகள் இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழாவில், திருமதி மீனாட்சி லெட்சுமணன் வெளியிட இதழைப் பெற்றுக்கொண்டு அவர் பேசியது:

    விழாவில் தலைமையேற்ற நீதியரசர் ஏஆர். லெட்சுமணன் எனது மானசீக குரு. அவர் பல புத்தகங்களை எழுதியவர். இந்தப் பகுதியைச் சேர்ந்த நகரத்தார்கள்தான் இந்தியாவில் அதிகமான பதிப்பகங்களை கொண்டவர்களாக திகழ்கின்றனர். குமுதம் இதழ் இதற்கு முன்னோடியாகும்.

    பத்திரிகையை வெளியிடுவது சாதாரணமானதல்ல. நான் ச.ரி.க.ம.ப.த.நி என்ற பத்திரிகை நடத்தினேன். மாதம் 7-ஆம் தேதிதான் பத்திரிகை வெளிவரும். நகரத்தார்கள் பதிப்பில் பிள்ளையார் சுழி போட்டவர்கள் என்றார்.

    விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர். லெட்சுமணன் தலைமைவகித்துப் பேசியது: 14 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். பதிப்பாளர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு.

    ரோஜாவின் நகரத்தார் திருமகள் இதழில் நகரத்தார் வாழ்க்கை சம்பவங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ளார். அவரது தந்தை ரோஜா முத்தையா சேர்த்துவைத்த புத்தகங்களை கொண்டு எழுதினோலே இதழில் எழுதிக் கொண்டே இருக்கலாம். பெண்களின் சமூக ஒற்றுமை குறித்து கூறுகிறார். ஆனால் பெண்களுக்கு சம உரிமை வழங்க நிலுவையில் இருக்கும் 33 சதவீத இட ஒதுக்கீடு என்று நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புதான் உள்ளது என்றார்.

    விழாவில், குமுதம் இதழின் நிர்வாக இயக்குநர் பா. வரதராசன் பேசியது: நகரத்தார் குடும்பங்கள் கூட்டுக் குடும்பத்துக்கு உதாரணமாக திகழ்கின்றன. இந்தியாவில் உள்ள கூட்டுக் குடும்ப முறை வெளிநாட்டவரை விரும்பச் செய்கிறது.

    கோட்டையூரில் ரோஜா முத்தையா சிறந்த புத்தகங்களை வாங்கிப் படித்ததோடு மட்டுமல்லாமல் தனது இல்லத்தில் அதனை நூலகமாக வைத்துப் பாதுகாத்தவர். இதனை அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தினர் அறிந்து வியந்தனர். அந்த புத்தகங்களை இன்று சென்னையில் சிகாகோ பல்கலைக்கழக அறக்கட்டளையினரே வைத்து மேலும் புத்தகங்களுடன் நூலகமாக பாதுகாத்து வருகின்றனர் என்றார்.

    விழாவில், முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தஞ்சை சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமசாமி ஆகியோர் பேசினர். பேராசிரியர் கண. சிற்சபேசன், வழக்குரைஞர் விஎஸ். ராமலிங்கம், தொழில் வணிகக் கழகத் தலைவர் முத்து.பழநியப்பன், கும. பழனியப்பச் செட்டியார், ஆத்தங்குடி அருணாசலம், வினைதீர்த்தான் உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக, இதழாசிரியர் ரோஜா வள்ளிக்கண்ணு வரவேற்றார். இதழின் துணை ஆசிரியர் கரு. முத்தையா நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai