சுடச்சுட

  

  புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி: பாமகவினர் அதிருப்தி

  By dn  |   Published on : 14th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி எம்.பி. தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவதால் பாமக-வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியாகப் போட்டியிடுவதா என்பது குறித்து விவாதிக்க வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி உள்ளனர்.

  புதுச்சேரி எம்.பி. தொகுதியில் அதிமுக சார்பில் எம்.வி.ஓமலிங்கம், திமுக சார்பில் நாஜிம், பாமக சார்பில் அனந்தராமன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் பாமக தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

  முதல்வர் ரங்கசாமியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 2 முறை சந்தித்து பாமக வேட்பாளரை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது முதல்வர் ரங்கசாமி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

  இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ரங்கசாமி அறிவித்துள்ளது பாமகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  இதையடுத்து, பாமக சார்பில் அனந்தராமன் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) கூட்டப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai