சுடச்சுட

  
  punrotti

  ராஜதந்திரம் தெரிந்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும், அப்போது தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் நிலைநாட்டப்படும் என்றார் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

  கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது:

  இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர்கள் மீதான தாக்குதல், கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் என்று எந்தப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டாலும் புதுதில்லிக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறைந்த எண்ணிக்கையில் எம்பிக்களைக் கொண்ட கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆகியிருக்கிறார். எனவே, எண்ணிக்கை பெரிதல்ல, பாராளுமன்றத் தேர்தலில் எம்.பி.யை தேர்வு செய்கிறோம். ஆனால், ராஜதந்திரம் தெரிந்தவர்தான் பிரதமர் ஆகிறார். அந்த தந்திரம் தெரிந்தவர் முதல்வர் ஜெயலலிதாதான்.

  புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆட்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதாவை தில்லி செங்கோட்டைக்கு அனுப்ப அனைவரும் சூளுரை ஏற்போம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai