சுடச்சுட

  
  sivathanu_pillai

  அதிவேகமாகச் செல்லும் ஆற்றல் படைத்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் விரைவில் உருவாக்கப்படும் என பிரம்மோஸ் திட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஆ.சிவதாணு பிள்ளை வியாழக்கிழமை தெரிவித்தார்.

  திண்டுக்கல் எம்விஎம் அரசினர் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

  பிரமோஸ் ஏவுகணை தற்போது ராணுவம், கப்பல் படை, விமானப் படை என முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

  அடுத்தகட்டமாக மணிக்கு 7,000 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கு டிஆர்டிஏ முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த வகை ஏவுகணையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிக ஆற்றல் கொண்டது. அழிவு கூடுதலாக இருக்கும்.

  அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே சூப்பர்சானிக் ஏவுகணை வைத்துள்ளன. அதைவிட சக்தி வாய்ந்ததாக உருவாக்கப்படும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் இந்தியாவின் தனிச்சையான திட்டமாக அமைய வாய்ப்புள்ளது. 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஹைபர்சானிக் ஏவுகணை திட்டம் நிறைவேற்றப்படும்.

  பிரம்மோஸ் ஏவுகணையைத் தொடர்ந்து, பிரம்மோஸ் மினி ஏவுகணை அமைக்கப்பட உள்ளது. மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு (2014) செப்டம்பரில் செவ்வாய்க் கிரக சுற்றுப்பாதைக்குச் செல்லும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai