சுடச்சுட

  
  rajini_alagiri

  போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லம். காலை 10.30 திமுகவின் கரை வேட்டியைத் துறந்து, இளம்பச்சை நிற கரை வேட்டி கட்டி வந்திருந்தார் மு.க.அழகிரி.

  மகன் துரை தயாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் உடன் வந்தனர்.

  ரஜினி, அவர்களை வரவேற்று உபசரித்தார்.

  பின்னர் அரசியல், சொந்த விவகாரம், கோச்சடையான் உள்ளிட்ட விஷயங்களையும் மனம் திறந்து ரஜினியோடு அழகிரி உரையாடி உள்ளார்.

  அதன் விவரம்: 1996-ல் மூப்பனார் தமாகா தொடங்கியபோதே நீங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இந்நேரம் முதல்வராக வந்திருக்கலாம். அரசியலுக்கு விஜயகாந்த் வந்துள்ளார். அவருக்கு 8 சதவீதம் வரை வாக்குகள் வைத்துள்ளார். அதனால் நீங்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றி நிச்சயம். புகழோடு பல நடிகர்கள் இருந்துள்ளனர்.

  ஆனால் எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும்தான் நடிகர் என்பதோடு, அரசியலுக்கு வந்து மக்களுக்குச் சேவை செய்து மங்காத புகழோடு உள்ளனர்.

  அதனால் நீங்களும் அரசியலுக்கு வரவேண்டும். காலம் கடந்துவிடவில்லை. முடிவு எடுக்க இதுவும் நல்ல தருணம்தான்.

  தில்லியில் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினேன். பாஜக அணிக்காகச் செயல்படுமாறு கூறினார்.

  மதுரையில் வரும் 16-ஆம் தேதி நிர்வாகிகளைச் சந்திக்கிறேன். பாஜக கூட்டணியை நீங்கள் (ரஜினி) ஆதரிப்பதாக இருந்தால், நானும் ஆதரிக்கத் தயார் என்று அழகிரி கூறியுள்ளார்.

  மேலும், ரஜினியிடம் தன் சொந்த விவகாரங்கள் தொடர்பாகவும் அழகிரி பேசியுள்ளார்.

  கட்சியிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அபாண்டமான முறையில் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார் என்று ரஜினியிடம் தெரிவித்துள்ளார்.

  மு.க.அழகிரி கூறிய எதற்கும், ரஜினிகாந்த் வெளிப்படையாக கருத்து எதுவும் கூறாமல் புன்னகையுடன் விடை கொடுத்தார்.

  சுமார் 20 நிமிட சந்திப்புக்குப் பிறகு வெளியில் வந்த அழகிரி, கோச்சடையான் படத்தில் வைரமுத்து எழுதி, ரஜினிகாந்த் பாடிய பாடல், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதற்காக வைரமுத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். ரஜினியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்று கூறினார்.

  கோச்சடையான் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.

  இதில், "மாற்றம் ஒன்றுதான் மாறாதது' என்று தொடங்கும் பாடலை ரஜினிகாந்தே ஹரிசரண், ஜதி உமாசங்கர் ஆகியரோடு இணைந்து பாடியுள்ளார்.

  இதில் ரஜினி பாடும் வரிகளில் சில:

  ""பகைவனின் பகையைவிட நண்பனின் பகையே ஆபத்தானது.

  சூரியனுக்கு முன் எழுந்துகொள்

  சூரியனை ஜெயிப்பாய்!

  நீ என்பது உடலா? உயிரா? பெயரா?

  மூன்றும் இல்லை செயல்'!

  இவ்வாறு அழகிரிக்குப் பிடித்த கோச்சடையான் பாடல் வரிகள் நீளுகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai