Enable Javscript for better performance
ஆம்புலன்ஸில் வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்- Dinamani

சுடச்சுட

    
    klm

    விபத்தில் சிக்கி காயமுற்ற மாணவர் ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதினார்.

    கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியைச் சேர்ந்த டேவிட் மகன் வின்மேன் (17). மேல்புறம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அஜித் (17). இவர்கள் இருவரும் அருமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்த மாணவர் அஜித், தனது ஹால் டிக்கெட்டை எடுத்து வர மறந்துவிட்டாராம். உடனே, அவர் தன் நண்பரான வின்மேனுடன் ஹால் டிக்கெட்டை எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    வின்மேன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், புண்ணியம் பகுதியில் எதிரே வந்த மினிலாரி மீது மோதியது. காலை 9.35 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் இரு மாணவர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார். இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஆம்புலன்ஸில் பள்ளிக்கு அழைத்து வந்து அங்கு நடைபெற்ற கணிதத் தேர்வை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மாணவர் அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவரால் தேர்வு எழுத முடியவில்லை. வின்மேன் மட்டும் தேர்வு எழுதினார்.

    காயங்களுடன் தேர்வு எழுதும் மாணவர் வின்மேன். உடன், மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai